இதற்கமைய நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ்தேவி புகையிரதம் புதன்கிழமை காலை 06.40 மணியவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு பகல் 02.32 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது.
அதேபோல் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் மாலை 06.54 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது.
காங்கேசன்துறை – அநுராதபுரம் வரையிலான யாழ்ராணி புகையிரத சேவை திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், பேரிடருக்கு பின்னர் குறுகிய காலப்பகுதியில் வடக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த புகையிரத பயணத்திற்கான முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளை பயணிகள் இப்போது முன்பதிவு செய்து கொள்ளலாம் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment