பொன்னதரம் என்பது மஞ்சள் நிற கல் ஆகும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் உடலில் தேவையற்ற முடியின் வளர்ச்சியை நீக்க பயன்படுத்தப்படுகிறது. முடி அகற்றும் பயன்பாட்டிற்காக இந்த கல் நசுக்கப்பட்டு தூள் செய்யப்படுகிறது, இது முடி அகற்றுவதற்கு இயற்கையால் அளிக்கப்பட்ட ஒரு பரிசு.
உதட்டுக்கு மேல், முகம் மற்றும் கை, கால்களில் உள்ள தேவையில்லாத, வேண்டாத முடிகளை நிரத்தரமாக நீக்குவதற்கு இந்த பொன்னதரத்தை எடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் பால் அல்லது ரோஸ்வாட்டர் சேர்த்து குழைத்து எடுத்து அதனை எங்கெல்லாம் தேவையில்லாத, வேண்டாத முடிகளை நீக்க வேண்டுமோ அந்த இடங்களில் தினமும் இரவு மற்றும் வாரத்திற்கு 2 முறை நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்துவரும்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான முறை: தலா 1 தேக்கரண்டி கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், அரிசி மாவு மற்றும் தேவையான அளவு பால் அல்லது தயிர் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பசை போல கலந்து, முடிகள் உள்ள இடத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை தொடர்ந்து வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் செய்து வர, தேவையற்ற முடிகள் படிப்படியாக உதிரும்.
Post a Comment