Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றியுள்ளதாக 'அநுர மீட்டர்' விஞ்ஞாபன கண்காணிப்பு தளத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 30 பிரதான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி 10 வாக்குறுதிகளில் PAYE வரி திருத்தம் மற்றும் அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பொருளாதார சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு, காவல்துறை மற்றும் சட்ட ஒழுங்கு, ஆட்சிமுறை மற்றும் சமூக பாதுகாப்பு போன்ற பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டும் துறைகளே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இது தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை வெளிப்படைத்தன்மையுடன் கண்காணிப்பதற்காக 'Manthri.lk' தளத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன (Maithri Meter) மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ (Gota Meter) ஆகியோரின் வாக்குறுதிகளும் இதேபோல் கண்காணிக்கப்பட்டன.

இலங்கையின் மிகப்பெரிய சுயாதீன சிந்தனைக் குழாமான 'Verité Research' நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இந்தத் தளம், பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி மேலதிக கண்காணிப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

Post a Comment

Recent News

Recent Posts Widget