Ads (728x90)

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் Hayleys Fentons Limited தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. 

மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்துடனான இக்காற்றாலை மின்நிலையம் 10 விசையாழிகளைக் (Turbines) கொண்டுள்ளதுடன், இதன் வருடாந்த மின் உற்பத்தி 207,000,000 கிலோவொட் மணித்தியாலங்களாகும். இத்திட்டம் 2027 மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது. 

புதிப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நாட்டை வலுப்படுத்துவதற்கு வழங்கப்படும் பங்களிப்பையும், அதேபோன்று இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக தனியார் நிறுவனம் அப்பகுதி மக்களுக்காக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளையும் பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, மன்னார் பகுதியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நிர்மாணிக்கப்படும் இந்த மின்நிலையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு 0.0826 டொலர் விலை இதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எமது அரசாங்கத்தின் கீழ் அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ததன் காரணமாக, வரலாற்றில் மிகக் குறைந்த விலையான 0.0465 டொலர் (இலங்கை ரூபா 14.37) விலையில் ஒரு அலகு மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget