Ads (728x90)

2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கு உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தநிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாடி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது.

கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால் உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget