டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசனைபடி போக்குவரத்துச் சேவையை மேலும் வலுப்படுத்துவதும், பயணிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையிலான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதுமே இதன் பிரதான நோக்கமாகும்.
அதன்படி பயணிகள் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் திட்டம் நேற்று மாகும்புர பல் நிலை போக்குவரத்து மையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக மாகும்புர - காலி மற்றும் மாகும்புர - எம்பிலிபிட்டிய ஆகிய வழித்தடங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
வங்கி அட்டைகள் மூலம் பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தும் போது பயணிகளிடமிருந்து மேலதிகக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இதன் மூலம் பயணிகள் சரியான கட்டணத்தை மாத்திரம் செலுத்தும் வசதி கிடைக்கிறது.
இந்நிகழ்வில் டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, மக்கள் வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment