Ads (728x90)

வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெனிசுவேலாவில் இனிமேல் மேலதிக இராணுவ அல்லது அரசியல் நடவடிக்கைகள் எதுவும் தேவைப்படாது என்று தாம் எதிர்பார்ப்பதாக மார்கோ ரூபியோ குறிப்பிட்டதாக செனட்டர் மைக் லீ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்வதற்காகவே நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தலைநகர் காரகாஸ் உள்ளிட்ட பல இடங்களில் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget