எதிர்வரும் மாதத்தில் இருந்து அரசதுறையின் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சில விண்ணப்பங்கள் இருக்கின்றன. அவை பல இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதை தமது அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் அவை தமிழ் மொழியில் கிடைத்தாலும், ஏனைய மாவட்டங்களில் தமிழ் மக்களுக்கு அவை தமிழ் மொழியில் கிடைப்பதில்லை.
எனவே மக்களின் நலன்கருதி அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான 22 விண்ணப்பங்கள் தற்போது மூன்று மொழிகளிலும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைவில் மக்களுக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
எனினும் அதற்கு முன்னர் அந்த விண்ணப்பங்களை இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார குறிபிட்டுள்ளார்.

Post a Comment