Ads (728x90)

சதொச போக்குவரத்து பிரிவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் புதல்வரான ஜோஹான் பெர்ணான்டோ, சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ வர்த்தக, வாணிப அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜொஹான் பெனாண்டோ கைது செய்யப்பட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget