இதற்கமைய கடந்த வருடத்தில் 13,100 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடிந்ததாகத் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளுக்காகப் புதிய ஆட்சேர்ப்புகள் மற்றும் நிரந்தரப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அஞ்சல் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் 2025 இல் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் 2025 இல் 378 உப அஞ்சல் அதிபர்கள் நிரந்தர நியமனங்களைப் பெற்றனர். அத்துடன் செப்டம்பரில், 1,000 அஞ்சல் உதவியாளர்களின் நியமனங்கள் முறைப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் திறந்த போட்டி மூலம் 600 அஞ்சல் சேவை அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு நடந்து வருவதாகவும், பெப்ரவரி 2026 இல் நியமனங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Post a Comment