கிரிக்கெட் இரசிகர்கள் இந்த உலகக் கிண்ணத்தை நேரில் கண்டு மகிழ்வதற்காக இன்று 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் முக்கிய நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, இலங்கை T20 அணித் தலைவர் தசுன் ஷானக்க, தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த உலகக் கிண்ணப் போட்டி 2026 பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை நடைபெறும். இப்போட்டியில் மொத்தம் 20 நாடுகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும். மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளன.


Post a Comment