இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.
சய்ட்டேஜா மூக்கமல்லா 51 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 79 ஓட்டங்களையும், ஷுப்ஹாம் ரஞ்சேன் ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களையும், மொனாங்க் பட்டேல் 36 ஓட்டங்களையும், ஷயன் ஜஹாங்கிர் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 37 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 15.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
பந்துவீச்சில் ஹார்மீத் சிங் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும், ஷட்லி வன் ஷோக்வைக் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், மொஹம்மத் மொஹ்சின் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
Post a Comment