Ads (728x90)

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக சுமார் 10 வருடங்களாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வாழ்ந்து வந்த கனேபல்ல தோட்டத்தின் கீழ் பிரிவைச் சேர்ந்த 5 குடும்பங்களுக்கு, தற்போதைய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய வீடுகள் நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்துகொண்டு வீடுகளைக் கையளித்தார். 

பத்து வருடங்களாக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த இந்த மக்களுக்கு, எமது அரசாங்கம் பதவிக்கு வந்து வெறும் மூன்று மாதங்களிலேயே நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகளைக் கட்டி முடித்து இன்று கையளித்துள்ளது. 

இந்த அரசாங்கம் ஒரு செங்கல்லைக் கூட இன்னும் நாட்டவில்லை என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். எட்டியாந்தோட்டைக்கு வந்து பாருங்கள், நாங்கள் மக்களுக்கு வீடுகளைக் கட்டி முடித்துள்ளோமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியும் என்றார்.

கடந்த காலங்களைப் போல அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வீடுகளைக் கொடுக்கும் கலாச்சாரம் இனி இல்லை என்றும், தகுதியுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கே வீடுகள் சேரும் என்றும் அவர் உறுதி அளித்தார். எங்களுக்குத் திருடிய அனுபவம் இல்லை, நேர்மையாகச் சேவை செய்யவே வந்துள்ளோம் என தெரிவித்தார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget