தமிழ், சிங்களம் மற்றும் மலையாளம் ஆகிய மும்மொழிகளிலும் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இந்திய - இலங்கைக் கலைஞர்களின் பங்களிப்பில் இலங்கையின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி நடித்துள்ளனர்.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கி உள்ளனர். ஒளிப்பதிவு ரிஷி செல்வம், எடிட்டிங் சுரேஷ் ஏ பிரசாத் , கலை இயக்கம் கலா மோகன்.கலைவளரி சகா. ரமணதாஸ் மற்றும் சுகந்தினி தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர் சீனுராமசாமி, லெனின் பாரதி, உலக சினிமா பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment