அம்பலாங்கொடையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கொலையாளிகளுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுத்ததாகக் கருதப்படும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கஹதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளடங்குவர். இவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், இந்த கொலையில் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய சந்தேக நபர் தற்போது விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment