Ads (728x90)

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 07 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவானது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன்  89 ஓட்டங்களையும், சிவம் டூபே 49 ஓட்டங்களையும், இஷன் கிசன் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஆதில் ராஷித் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

254 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஜெகெப் பெத்தல் 105 ஓட்டங்களையும், வில் ஜெக்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது அணியாக இந்தியா ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை எதிர்த்தாடவுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget