இத்தொழிற்கல்விக்கு க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெறுபேறுகள் அனுமதிக்கு கருத்திற் கொள்ளப்படமாட்டாது. 2025, 2026 அல்லது கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது பிரதேசத்தில் இத்துறை வழங்கப்படும் பாடசாலைகளில் இணைந்து கொள்ள முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கல்வி திட்டத்தின் மூலம் தரம் 12 இல் இணைந்துக்கொள்ளும் மாணவர்கள் மென் திறன்கள் ((Soft Skills) மற்றும் பல்வேறு தொழிற்துறை சார்ந்த அறிமுக பாடங்களைக் கற்பார்கள்.
தரம் 13 இல் அரச தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி மற்றும் நிறுவன ரீதியான வேலைத்தளப் பயிற்சிகளை (Workplace-based training) பெறுவார்கள்.
இக்கல்வி முடிவில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ மட்டம் 4 (NVQ Level 4) சான்றிதழ் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் (IT), சுகாதார சேவைகள், ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, மின்சாரம் மற்றும் இலத்திரனியல், விவசாயம், விளையாட்டு, மற்றும் விற்பனை முகாமைத்துவம் உள்ளிட்ட 26 இற்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட தொழிற் துறைகளில் மாணவர்கள் பயிற்சிகளைப் பெற முடியும்.
ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களை கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.moe.gov.lk இல் பெற்றுக்கொள்ளலாம். 0112 787136 / 0112 786746 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment