அடக்குமுறை என்று வெறுமனே கூறிக்கொண்டிருக்காது, உண்மையில் அடக்குமுறை இடம்பெற்ற சம்பவங்களை எங்களிடம் முன்வையுங்கள்.
இந்த மூன்று மாத காலத்திற்குள் அந்தச் சம்பவங்கள் எங்கே நடந்தன? யாராவது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்களா? இந்த விதிமுறைகளின் கீழ் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா? அவற்றை எங்களிடம் முன்வையுங்கள்.
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அடக்குமுறை கையாளப்படுகின்றது எனவும், ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கப்படுகிறது எனவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகிய நாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது அவசரகாலச் சட்டத்தை எதிர்த்தோம். அந்தச் சந்தர்ப்பங்களில் அவசரகாலச் சட்டத்தின் மூலம் அடக்குமுறைகள் திட்டவட்டமாக நடந்தபோதுதான் நாம் அதை எதிர்த்தோம் என்றார்.
Post a Comment