Ads (728x90)

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது. 

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியின் காணி உறுதிகளோடு உள்ள உரிமையாளர்கள் 17 பேரினதும் காணிகளின் வரைபடத்தை கீறுவதற்கு அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 17ஆம் திகதி காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்ட வேளை, விகாராதிபதி அதற்கு சம்மதிக்காது, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையால் அன்றைய தினம் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டது. 

இன்றைய தினம் இரண்டாவது தடவையாக காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில், காணி உரிமையாளர்கள் கடித தலைப்பில் உறுதி மொழி வழங்கவில்லை என்று காணி உரிமையாளர்கள் குழப்பம் விளைவித்து, அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget