Ads (728x90)

கடன் தொல்லை தீர, செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி, "ஓம் கணபதயே நமஹ" மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் திருவீழிமிழலை திருப்பதிகம் பாடி, ரணவிமோசன பைரவரை வழிபடவும். பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு சிறந்தது. தேய்பிறை சதுர்த்தியில் கணபதியை வழிபட கடன் சுமை குறையும்.

நமக்கு கடன்சுமை அதிகமாக இருந்தால் அந்தக் கடனில் அசல் தொகையில் ஒரு பகுதியை செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஓரை, ராகு காலம் அல்லது எமகண்டத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். 

நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்தக் கிழமையில் வரும் குளிகன் நேரத்திலும் கடன் தொகையை திருப்பி செலுத்தலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியிலும் கடனை திருப்பி செலுத்தலாம்.

நாம் வாங்கியுள்ள கடனை முடிவுக்குக் கொண்டுவர மரண யோகம் மிகச் சிறந்தது. மரண யோகம் இருக்கும் நாளில் நீங்கள் ஒரு பகுதி கடனை திருப்பி செலுத்தினால் கடன் சுமை குறைய நல்ல வழி பிறக்கும்.

மரண யோகத்தில் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. பொன், பொருளை இரவில் கொடுக்கக் கூடாது. இதைத் தவிர மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது. அது அவரவர் தனிப்பட்ட ஜாதக அமைப்பைப் பார்த்து செய்யக்கூடிய பரிகாரம். 

பணம் வீணாக செலவு ஆவதை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திருதியை அன்று இயன்ற அளவு அன்னதானம் செய்யலாம்.

வளர்பிறை வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கி வீட்டில் வைத்து பயன்படுத்தலாம். அஸ்வினி, மகம் மூலம் நட்சத்திர நாட்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு போர்வை வாங்கித் தரலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமையன்று பசுமாட்டிற்கு கீரை, பழங்கள் தரலாம்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget