Ads (728x90)

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்த 14 அம்சக்கோரிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.

இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க இல்லை என்று அவர் தனது றுத் சோஷியல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் உலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்குப் பெரிய விலை கொடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா முன்மொழிந்த 9 அம்ச திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே, இந்த 14 அம்சத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget