Ads (728x90)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 410 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 470 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 392 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக ரூபா 458 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை ரூபா 265 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget