Ads (728x90)

தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி தமிழக வெற்றிக்கழகத்துக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 

தமிழக முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், வி.எஸ். பாபு, ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட பல தவெக தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திராவிட முன்னேற்றக்கழகம் 59 தொகுதிகளில் வெற்றி பெற்று, அது பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 47 தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளது.

இவற்றை தவிர இந்திய தேசிய காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தலா இரண்டு தொகுதிகளில் வெற்றியீட்டியுள்ளன.

தமிழக அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget