ஆப்பிள் அல்வா / Apple Halwa
தேவையான பொருட்கள்:-
ஆப்பிள் துருவியது - 500 கிராம்
கோதுமை மாவு - 500 கிராம்
நெய் - 250 கிராம்
ஏலத்தூள் - சிறிதளவு
சீனி - 1 கிலோ
பால் - 500 மில்லி
முந்திரி பருப்பு - 200 கிராம்
கேசரி பவுடர் - சிறிதளவு
செய்முறை:-
பாலில் துருவிய ஆப்பிள் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும்.
இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்துகிளறவும்.
சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் முந்திரி பருப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும்.
இது சுவையாக இருக்கும். உடம்புக்கும் சத்தானதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment