Ads (728x90)


பால் சோளம் மிளகு வறுவல் /Baby Corn Pepper Fry

தேவையான பொருட்கள்:

பேபிகார்ன் (மிகச்சிறிய அளவிலான சோளம்) - 1/2 கிலோ
வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 150 கிராம்
பச்சைமிளகாய் - 25 கிராம்
கொத்தமல்லி இலை - 100 கிராம்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 100 கிராம்
மிளகு - 75 கிராம்
சோம்பு - 20 கிராம்
சீரகம் - 10 கிராம்
ஏலக்காய் - 5 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 15 கிராம்
மஞ்சள்தூள் - 5 கிராம்

செய்முறை:

1.பேபிகார்னை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து ஸ்பான்ஜ் மாதிரி வேக வைத்து, சின்னதாக நறுக்கி வைக்கவும்.

2.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். மிளகு 10 கிராம், சோம்பு 5 கிராம், சீரகம் ஏலக்காய் ஆகியவற்றை வெறும் கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள சோம்பு, சீரகம் தாளிக்கவும்.

3.நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். பிறகு பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

4.மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். வேகவைத்து நறுக்கிய பேபிகார்ன் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறவும்.

5.எல்லாம் ஒன்றாகக் கலந்து வரும்போது, பொடியைத் தூவிக் கிளறவும். ஆவி வந்து, வாசனை வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். தோசை, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, தயிர்சாதம் என எதனுடனும் சாப்பிட உகந்தது இது.

Post a Comment

Recent News

Recent Posts Widget