Ads (728x90)


தேவையான பொருள்கள்:

பீட்ரூட் பெரியது - 1
சோள மாவு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
புது க்ரீம் - 4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 சொட்டு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப

செய்முறை:

பீட்ரூட்டை நன்கு துருவி வேகவைத்துக் கொள்ளவும். வெண்ணெயை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.

பீட்ரூட்டையும் உப்பையும் போட்டு, தண்ணீர் விட்டு காய்களை நன்கு மசித்து, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

புதிய க்ரீமை, எலுமிச்சை சாறுடன் நன்கு அடித்து சேர்க்கவும்.

வினிகர், நிறைய மிளகுப் பொடி சேர்த்து சூடாக பரிமாறவும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget