அத்துடன் கலய்ஸ்ஸிலிருந்து பிரித்தானியாவிற்கு ஆட்களைக் கடத்துபவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதகுடியேற்றவாசிகளை தமது கார்களில் மறைத்து வைத்து கடத்த முயல்வதாக அரச வழக்கறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் இவ்வாறான கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கார், வான் மற்றும் லொறி போன்ற வாகன சாரதிகளை தமக்கு கீழ் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் அவர்களைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பிரான்ஸ்ஸிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் ஒவ்வொரு மாதமும் 10 இற்கும் மேற்பட்ட ஆட்கடத்தல்காரர்கள் பயணிப்பதாக கலய்ஸ்ஸின் பிரதி அரச வழக்கறிஞர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான சட்டவிரோத கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு கைதானவர்கள், தமது கடன் சுமையாலேயே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment