ஸ்கொட்லாந்தின் ஸ்டிர்லிங் நகருக்கு அண்மையில் பெண் கைதிகளுக்கான ஒரு புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறைச்சாலையானது வெரும் 80 பெண் கைதிகளுக்காகவே அமைக்கப்படவுள்ளதாகவும், இது Cornton Vale இல் உள்ள சிறைச்சாலைக்கு பதிலாக அமைக்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இதற்கு முன்பு சுமார் 300 குற்றவாளிகளுக்கான ஒரு சிறைச்சாலையை Inverclyde பகுதியில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்தின் நீதித் துறைக்கான அமைச்சரவைச் செயலாளர் மிசெல் மெதெசன் குறித்த திட்டத்தை தடுத்து நிறுத்தியிருந்தார்.
தற்பொழுது அமைக்கப்படவுள்ள இந்த புதிய சிறையானது, மிகவும் கடுமையான பெண் குற்றவாளிகளுக்காகவே அமைக்கப்படவுள்ளது. இதில் மேலும் ஐந்து பகுதிகள் வௌ;வேறாக அமைக்கப்படவுள்ளன. அந்த ஒவ்வொரு பகுதியும் தலா 20 பெண் கைதிகளை வைக்கக் கூடிய வகையில் அமைக்கப்படும்.
மேலும், அந்த ஐந்து பகுதிகளும் பெண் கைதிகள் சிறைப்படுத்தப்படும் பகுதிக்கு அண்மையிலேயே அமைக்கப்படவுள்ளன. இதனால் குறித்த கைதிகள் தமது உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு இது இலகுவாக இருக்கும்.
தற்பொழுது ஸ்கொட்லாந்தில் 408 பெண்கள் சிறைக் கைதிகள் இருக்கின்றனர் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 226 பேர் Cornton Vale இலும், 80 பேர் எடின்பேடிலும், 48 பேர் HMP Grampian இலும் மேலும் 54 பேர் கிரீனொக் ஆகிய இடங்களிலும் இருக்கின்றனர்.
இவற்றில் 1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Cornton Vale சிறையில் 1995 முதல் 2002ஆம் ஆண்டு வரை 11 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இந்த சிறைச்சாலை the vale of death என்ற பெயர் கொண்டும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment