தமிழ்.தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழும் நடிகை சமந்தா, நான் ஒன்றும் அழகான பெண்ணில்லை என்று உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.
என்னது சமந்தா அழகில்லையா என்று பொங்கி விடாமல் மேலே படியுங்கள் நான் ஒன்றும் பிறக்கும் போதே அழகான பெண்ணாக பிறந்து விடவில்லை, பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் யாருமே நம்மை சைட் அடிக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன்.
ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்று உங்கள் கண்களுக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றால் அதற்குப் பின்னால் பல பேரின் உழைப்பு இருக்கின்றது.
மேலும் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை நான் ஆசைப்பட்டு பெற்றது. அதனால் எனது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னை இன்னும் அழகாகக் காட்டுகிறது, என்று மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கிறார் நடிகை சமந்தா.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment