
பிரித்தானியாவின் விண்ட்சர் கோட்டையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் தன்னை கிண்டல் செய்த சிற்றுலா பயணியை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பெர்க்ஷிரி பகுதியில் அரச குடும்பத்துக்கு சொந்தமான விண்ட்சர் கோட்டை உள்ளது.இந்த கோட்டையை காவல் காக்கும் பணியை புகழ்பெற்ற குயின்ஸ் கார்ட் என்ற பாதுகாப்பு படையினர் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் கோட்டையில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணி ஒருவர் அவரை கிண்டல் செய்துள்ளார்.
மேலும் அவரை போலவே அவருடன் நடந்து சென்றுள்ளார். உச்சக்கட்டமாக பாதுகாப்பு வீரரின் தோளில் கைபோட்டு அவரை கிண்டர் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதுகாப்பு வீரர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணி அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இதை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இதனிடை இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது, பாதுகாப்பு வீரர் செயலில் தவறு ஏதும் இல்லை. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வீரர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



Post a Comment