புதுமை:
கூட்டத்தைக் கவர அவ்வப்போது ஏதாவது ஒரு புதுமையை காபி ஷாப்கள் அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன. இதில் "லேட்டஸ்ட்' ஆக வந்துள்ளது தான், காபி நுரையில் உங்கள் உருவம்.லண்டனில் உள்ள ரிப்பில் மேக்கர் நிறுவனம் இதற்கான இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. உங்கள் உருவத்தை போனில்
"செல்பி' எடுத்து, இந்த இயந்திரத்திற்கு அனுப்பி விட்டால், 10 நிமிடங்களில் காபி தயாராகி, அதன் தலையில் பொங்க பொங்க ஊற்றப்பட்டிருக்கும் வெள்ளை நுரையில், உங்கள் அழகான உருவமும் அசலாக தெரியும்.
உருவம் மட்டுமல்லாது, உங்களுக்கு பிடித்த வாசகம், குடும்ப படம் என்று எதை வேண்டுமானாலும் நுரையில் அச்சிட்டு அதன் பிறகு, ஆசை ஆசையாய் பருகலாம்.ஆனால் என்ன, உங்கள் உள்ள கவர்ந்த "கள்வரின்' உருவத்தை எப்படி பருகுவது என்ற தயக்கமும் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படி நினைப்பவர்கள், அந்த காபியை அப்படியே நினைவு சின்னமாக வைத்துக்கொள்ள வேண்டியது தான்.
Post a Comment