Ads (728x90)


குளிர்காலத்தில் பெறப்படும் குறைவான சூரிய ஒளியின் காரணத்தால் இதய நோய்கள் ஏற்படுகின்றது என்ற கருத்தை ஸ்கொட்லாந்தின் டன்டீ பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
மேலும், விட்டமின் ‘டி’ யானது இதய நோய்களுக்கு முக்கிய காரணியல்ல என்று தமது ஆய்வு தெரிவிப்பதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சர்வதேச இதழ் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
குளிர்கால மரணத்திற்கு காரணமாக இருப்பது விட்டமின் ‘டி’ குறைவுதான் என 1981 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. எனினும், தற்போதைய ஆய்வுகள் விட்டமின் ‘டி’ குறைவானது ஏனைய நோய்களுக்கான காரணிகளாக இருக்குமே தவிர இதய நோய்க்கு காரணியாக இருக்காது என்று தெரிவிக்கின்றன.
சூரிய ஒளியிலிருந்தே அதிகமாக விட்டமின் ‘டி’ கிடைக்கின்றது என்று ஸ்கொட்லாந்து தேசிய சுகாதார சேவைகள் ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்நிலையில், விட்டமின் ‘டி’ மற்றும் குளிர்கால வெயிலினால் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமை தொர்பில் ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் பல நோயாளிகளின் இரத்தம் சேமிக்கப்பட்டு ஜேர்மனியில் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஆய்வின் முடிவில், குளிர்கால உயிரிழப்புக்களுக்கு பின்னரான மார்ச் மாத காலப்பகுதியிலேயே மக்களின் உடலில் விட்டமின் ‘டி’ குறைவாக இருக்கின்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget