ஆந்திரா பிண்டி சோலே
தேவையானவை
கொண்டைக்கடலை (வெள்ளை/கருப்பு) - ஒரு கப்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
மிளகு - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
டீ பேக் - ஒன்று
மாதுளை பொடி (Anardana/pomegranate seeds powder) - 1 1/2 தேக்கரண்டி
அம்சூர் பொடி (Dry Mango powder) - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
1.மாதுளை பொடி இல்லாவிட்டால் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். மாதுளை முத்துக்களை வெயிலில் சில மணி நேரம் காய வைத்து ஈரம் சற்று குறைந்ததும், கடாயில் போட்டு வறுக்க வேண்டும்.
2.சுத்தமாக கையில் ஒட்டாமல் ஈரம் போனதும் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்து வைக்கவும்.
3.சன்னாவை இரவு முழுக்க ஊற வைத்து அத்துடன் டீ பேக் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். மிளகு பொடி செய்யவும். சீரகம் வறுத்து பொடி செய்யவும்.
4.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி பூண்டு தட்டி சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
5.இதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.
6.இத்துடன் வேக வைத்த சன்னா தேவையான நீரோடு சேர்த்து ஊற்றி உப்பு மற்றும் மாதுளை தூள் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.
7.மிதமான தீயில் வைத்து நீர் முழுவதும் வற்றி மசாலா சன்னாவில் ஒட்ட பிரட்டி எடுக்கவும். அம்சூர் பொடி இல்லாமல் எலுமிச்சை சேர்க்க விரும்பினால் இந்த நிலையில் சேர்க்கலாம்
8.கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும். சுவையான பிண்டி சன்னா தயார். ரொட்டி, நாண், பட்டூரா போன்ற வகைகளுக்கு நன்றாக இருக்கும்.
Tip
இதில் வெங்காயம் முதலில் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. வெறும் இஞ்சி பூண்டு வதக்கி கடைசியாக கொத்தமல்லியுடன் ஃப்ரெஷாக நறுக்கிய வெங்காயம் தூவி எடுக்கலாம். தக்காளி சேர்க்க தேவை இல்லை. டீ பேக் கட்டாயம் இல்லை. கலருக்காகவே அதை சேர்க்கிறார்கள். ஒரிஜினல் ரெசிபி கருப்பு கலர் கொடுக்க நெல்லிக்காய் பொடி சேர்த்து சன்னாவை ஊற வைப்பார்கள். இப்போது சுலபமாக்க டீ பேக் சேர்க்கிறார்கள். அம்சூர் பொடி இல்லை என்றால் எலுமிச்சை சாறு ஒரு மேசைக்கரண்டி சேருங்கள். தூள் எல்லாமே ஃப்ரெஷாக பொடித்து சேர்ப்பது நல்ல வாசம் தரும். இந்த குறிப்பில் மாதுளை முத்து பொடி தான் முக்கியம்.

Post a Comment