மீன் குழம்பு
தேவையானவை:
வவ்வா மீன் - அரைக் கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 8 பல்
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழம்பு கரண்டி
வதக்கி அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10 + 1 பெரிய வெங்காயம்
பூண்டு - 10 பல்
தக்காளி - 3
தேங்காய் பொடி - 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது (கடைசியாக குழம்பின் மேல் தூவ)
செய்முறை:
1.மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து கழுவி வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
2.வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் பவுடர், அதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.
3.அரைத்த விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
4.வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
5.நன்கு வதங்கியதும் கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
6.குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை சேர்க்கவும்.
7.மீன் வெந்ததும் வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடித்து குழம்பில் போட்டு இறக்கவும்.
8.நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி அடுப்பில் சூடு பண்ணவும். நன்கு சூடேறியதும் கரண்டியோடு சேர்த்து குழம்புக்குள் விட்டு கலக்கி மூடவும்
9.கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். மணமணக்கும் கலர்ஃபுல்லான மீன் குழம்பு தயார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment