தேவையான பொருள்கள்:
மஷ்ரூம் - கால் கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
3.வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கி, அதனுடன் மஷ்ரூமைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த் தூள், மல்லித் தூள் மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
4.அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்றாகக் கிளறி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பிரட்டிவிட்டு கொதிக்கவிடவும். கலவை திக்கானதும் ஒரு முறை கிளறிவிட்டு இறக்கவும்.
5.சுவையான மஷ்ரூம் மிளகு வறுவல் ரெடி.
Post a Comment