
நேற்று (05) காலை உணவு அருந்திய பின்னர் கூடுதலான மாணவர்கள் தமக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக கூறியமையால் உடனடியாக மருத்துவ நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவ்வேளையில் சில சிறுவர்கள் வாந்தி எடுத்ததுடன் மயக்க நிலைக்கும் சென்றுள்ளனர் என இன்று (06) டெய்லி ரைம்ஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
சிறுவர்களை உடனடியாக பரிசோதித்த மருத்துவர் ஆயிஷா ஈசானி, அவர்கள் உட்கொண்ட உணவு விஷமானதினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சிறுவர்கள் இன்னும் இரைப்பை நோயினால் அவதியுறுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment