
மத்திய நைஜிரியாவின் நகரான ஜோஸில் உள்ள உணவு விடுதி மற்றும் பள்ளிவாசலில் இடம்பெற்ற இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் சுமார் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என வௌிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உரிமை கோரியில்லாத போதிலும் ஜோஸ் நகரை இதற்கு முன்னரும் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குயுள்ளனர் என நைஜிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இப்பிரதேசங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்தார் நிகழ்வு இடம்பெற்று சிறிது நேரத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உணவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 23 பேரும் பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 21 பேரும் உயிரிழந்துள்ளதுடன் 47 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய அவசரகால அமைப்பு தெரிவித்துள்ளது.
இன்னும் தகவல்கள் சேகரிப்பட்டு வருகின்றமையினால் உரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அவ்வமைப்பு அச்சம் வௌியிட்டுள்ளது.
Post a Comment