
இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் (134) அபார ஆட்டத்தால் 430 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. வாட்சன் 29 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வாட்சன் மேலும் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ஹாடின் 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 308 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் ரோஜர்ஸ் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட், வுட், மொயீன் அலி தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி சற்று அதிரடியாக ஆடி ரன் குவித்தது. இதனால் குறிப்பிட்ட இடைவேளியில் விக்கெட்களை இழந்தப்படியே இருந்தது. ஆனால் ஜோ ரூட்டும், இயன் பெல்லும் சிறப்பாக ஆடி தலா 60 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி. தரப்பில் நாதன் லயான் 4 விக்கெட்களை விழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸ் ரன்களையும் சேர்த்து ஆஸ்திரேலியாவிற்கு 412 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயத்துள்ளது இங்கிலாந்து.
Post a Comment