
ஜெர்மனியில் உள்ள அன்ஸ்பாச்சி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் இன்று காலை மர்மநபர் திடீரென வந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதில் ஒரு வயதான பெண் உட்பட 2 பேர் பலியானார்கள். ஒருவர் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பெட்ரோல் நிலைய ஊழியர்களின் உதவியுடன் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசிவருவதாக கூறப்படுகிறது.
மேலும் முதல் கட்ட விசாரனையில் பலியானவர்களுக்கும் குற்றவாளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Post a Comment