ஒரு முறையாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன், எதற்காகவும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கீழ்நோக்கி ஓடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் சூரியனின் கதிர்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோல மனமும் உலக சுகங்களை நாடிப் போவது இயற்கைதான். இறையருள் அதனை உயர்ந்த பொருளை நாடிச் செல்லுமாறு தூக்கி விடுகிறது.–சாரதாதேவி.
உலகம் நமக்கு எப்படித் தோன்றுகிறது என்பது, நமது மனப்பான்மையைப் பொறுத்தது. நமது எண்ணங்களே பொருட்களை அழகானவை ஆக்குகின்றன. அவற்றை விகாரமானதாக ஆக்குவதும் நம் எண்ணங்களே. உலகம் முழுவதும் நம் மனதில்தான் இருக்கிறது. எதையும் சரியான முறையில் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்த உலகை நம்புங்கள். உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உள்ளது.
–விவேகானந்தர்.
–விவேகானந்தர்.
–ஸ்ரீராமர்.
Post a Comment