Ads (728x90)

இன்டர்நெட்டில் வெளிவந்த பாபநாசம்: படக்குழுவினர் அதிர்ச்சி

லையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக்காகி ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதில் கமல், கவுதமி ஜோடியாக நடித்துள்ளனர்.

கடந்த வாரம் வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வசூலித்தது. இந்த நிலையில்தான் ‘பாபநாசம்’ முழு படமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து படத்தின் டைரக்டர் ஜீத்துஜோசப் கூறும்போது, ‘பாபநாசம்’ படத்தை இணையதளத்தில் யாரோ வெளியிட்டுள்ளனர். இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கமல் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்பாலாஜி கவனத்துக்கு கொண்டு சென்றேன். போலீசில் புகார் அளிப்பது குறித்தும் விவாதித்தோம்.

இணைய தளங்களில் ‘பாபநாசம்’ படம் வெளியாவதை தடுக்க தனியார் நிறுவனங்களின் உதவியை நாடி இருக்கிறோம். இந்த செயலை செய்தவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget