
இவ்வார இறுதியில் இத்திட்டம் தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் 2017ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 450,000 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மோதல்கள் இடம்பெற்ற 2012ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் அமெரிக்கப் படையில் சுமார் 570,000 பேர் பணிபுரிந்தனர். கடந்த ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க படையினர் குறைப்பு நடவடிக்கை ஆரம்பமானது. அதிக செலவு மிகுந்த இரு யுத்தங்களின் பின்னர் பணியில் 450,000 பேர் நிறுத்துவது என்ற பெண்டகன் தலைமை அதிகாரி சக் ஹாகலின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.
இன்னும் சுமார் 10,000 அமெரிக்க துருப்பினர் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டுள்ளனர். அவர்களை மீள அழைக்கும் நடவடிக்கை எதிர்வரும் 2016 இறுதிக்கும் நடைபெறவுள்ளது. மேலும் 3,500 அமெரிக்க படையினர் ஈராக்கை ஆட்டிப்படைக்கும் ஐஸ் படையினருக்கு எதிராக போராடும் அந்நாட்டு படையினருக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டவர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் நேற்று (07) 60 சிரிய மக்கள் மட்டுமே பயிற்சிக்காக வந்திருந்தனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
1940 இற்கு முன்னரான காலப்பகுதி மற்றும் இரண்டாம் உலக மகா யுத்ததில் அமெரிக்க படையினர் காலடி வைக்கும் முன்னர் அமெரிக்க துருப்பில் குறைவான எண்ணிக்கையான படையினரே அங்கம் வகித்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது 270,000 படையினர் பணியாற்றும் துருப்பினராக இணைக்கப்பட்டனர். செப்டெம்பர் 11- 2001 ஆண்டு தாக்குதலின் போது அமெரிக்கப் படையில் 480, 000 துருப்பினர் பணியாற்றினர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் முன்வைக்கப்படும் வரவு செலவு திட்டத்துடன் அமெரிக்க துருப்பிலிருந்து 30,000 படையினர் தாமாகவே பதிவி விலகவேண்டியேற்படும் என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment