Ads (728x90)

அதிர்ச்சி!!! வேலையை விட்டு போவதாய் சொன்ன பெண் ஊழியரை அடித்து உதைத்த கொடூர மேனேஜர்: வீடியோ பதிவு

னித நாகரீகத்தின் உச்சமாக விளங்கும் அமெரிக்காவில் வேலையை விட்டு போவதாய் சொன்ன பெண் ஊழியரை அந்நிறுவனத்தின் மேனேஜர் மிருகத்தனமாக அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

நியூயார்க்கின் மன்ஹேட்டன் நகரில் உள்ள பனேரா பிரட் ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் நேற்று வேலை நேரத்தின் போது மேனேஜரிடம் தனக்கு வேலை செய்ய விருப்பமில்லை. அதனால் நான் வேலையை விட்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேனேஜர் அந்த பெண்ணை வெளியே தள்ளியுள்ளார்.

இதனால் அதிர்சியடைந்த அந்தப் பெண் நியாயம் கேட்பதற்காக உள்ளே வந்தபோது சுற்றி இருப்பவர்கள் சொல்வதையும் கேட்காமல் அந்த அப்பாவிப் பெண்ணின் முகத்தில் ஆவேசமாக குத்தி அவரை கீழே தள்ளி விட்டுள்ளார். இந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் அதை பிரபல வீடியோ வலைதளமான யூடியூபில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து தற்போது போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget