
பேஸ்புக் நிறுவனம் இதுவரை நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கான ஐகானில் ஆணுக்கு பின்னால் பெண் இருப்பது போன்ற தோற்றத்தையே வெளியிட்டு வந்தது. ஆனால் திடீரென சில தினங்களுக்கு முன் அதன் ஐகானில் மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், பேஸ்புக்கின் டிசைனிங் மேனேஜரான கெயிட்லின் வின்னர், "கல்லூரியில் படித்த ஒரு பெண்ணாக பெண் பின்னால் இருப்பது போன்ற ஒரு விஷயத்தை பார்ப்பது எனக்கு கடினமாக இருந்தது. அதுவும் அவளது தோள் கூட முழுமையாகத் தெரியாது. ஆணின் நிழலிலேயே பெண் இருக்க முடியும் என்பதை குறியீட்டு முறையில் அது உணர்த்துவதாக தோன்றியது. அதனால் அதை பெண்ணுக்கு பின்னால் ஆண் இருப்பது போல் மாற்றியுள்ளோம். இது மாற்றத்திற்கான நேரம்" என்று விளக்கமளித்துள்ளார்.
திடீர் மாற்றம் ஏன் என்று சில ஆண்கள் கொக்கரித்தாலும் பெண்ணாலதானப்பா இந்த உலகத்துக்கு வந்தோம், அவங்க பின்னாடி இருக்கறதுல என்ன பிரச்சனை என்று கூலாக கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
Post a Comment