
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீராங்கனையும் விம்பிள்டன் பட்டத்தை 5 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் 23–ம் நிலை வீராங்கனையுமான விக்டோரியா அசரென் காவை (பெலாரஸ்) எதிர் கொண்டார்.
இதில் செரீனா 3–6, 6–2, 6–3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
செரீனா வில்லியம்ஸ் அரை இறுதியில் பரம்பரை எதிரியும், 4–ம் நிலை வீராங்கனையுமான மரியா ஷரபோவாவை (ரஷியா) சந்திக்கிறார்.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ரட்வன்ஸ்கா (போலந்து)– கார்பி முகுருஜா (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.
ரட்வன்ஸ்கா கால் இறுதியில் 7–6 (7–3), 3–6, 6–3 என்ற கணக்கில் அமெரிக்காவை சேர்ந்த கெய்சை வீழ்த்தினார். கார்பி 7–5, 6–3 என்ற கணக்கில் டிமியாவை (சுவிட்சர்லாந்து) தோற்கடித்தார். 18 ஆண்டுக்கு பிறகு ஸ்பெயின் வீராங்கனை கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் மோதும் வீரர்கள் விவரம்:–
1. ஜோகோவிச் (செர்பியா)– சிலிச் (குரோஷியா).
2. வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து)– ரிச்சர்டு கேஸ்கியூட் (பிரான்ஸ்).
3. ஆன்டி முர்ரே (இங்கிலாந்து)– வாசென் பாஸ்பி சில் (கனடா).
4. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)– சிமோன் (பிரான்ஸ்).
கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)– ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) கால்இறுதிக்கு நுழைந்தது.
Post a Comment