Ads (728x90)

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை சேசிங் செய்த பாகிஸ்தான்

லங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

* பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான். ஆசிய மண்ணில் அரங்கேறிய 2-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6-வது அதிகபட்ச சேசிங்காகும் இது பதிவானது. 2003-ம் ஆண்டில் செயின்ட்ஜான்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்ததே டெஸ்ட் போட்டியில் உச்சகட்ட சேசிங்காக இருந்து வருகிறது.

* 2006-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும்.

* பல்லகெலேவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் முடிவு தெரிந்து இருப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு இங்கு நடந்த 3 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget