Ads (728x90)


பாகுபலி படத்துடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

மீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களின் டிரைலர்கள் மற்றும் டீசர்கள் திரையிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படம் வெளியான திரையரங்குகளில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் ‘கோ 2’ படத்தின் டீசர் ஒளிப்பரப்பப்பட்டது.

அந்த வரிசையில் இன்று உலகெங்கும் 4000 தியேட்டர்களில் ‘பாகுபலி’ படம் ரிலீசாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை ராஜமவுலி பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார்.

இப்படம் வெளியான திரையரங்குகளில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் டிரைலர் ஒளிபரப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஆனந்தி மற்றும் மனிஷா யாதவ் நடித்துள்ளார்கள். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget