
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ள ரவ்ங் எரிமலை தொடர்ந்து சாம்பலை கக்கி வருவதால், சர்வசேத விமான நிலையம் உள்பட 4 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது ரவ்ங் எரிமலை. தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் என்று பெயர் பெற்ற இந்த எரிமலை, கடந்த ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடர்ந்து சாம்பலை கக்கி வருகிறது. இதனால் பாலியலில் உள்ள சர்வதேச விமானநிலையம், மற்றும் லம்போக்,பானியுவாங்கி, ஜெம்பர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று விமான நிலையங்கள் இன்று இரவு 10 மணி வரை மூடப்பட்டுள்ளன.
இதனால் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பயணிகள் விமான நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள ஏனைய விமான நிலையங்கள் வழக்கம் போல இயங்கி வருவதாக அந்நாட்டு விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Post a Comment