லண்டனில் சமீபத்தில் தேசிய அளவிலான புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ஒட்டுமொத்த இங்கிலாந்தின் மக்கள்தொகையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களில் இந்தியர்களே அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2004-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் சுமார் 7.6 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
பிரிட்டன் பிரதமர் கடந்த 2010-ம் ஆண்டிற்கு பிறகு 3 முறை இந்தியாவுக்கு வந்திருப்பது இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கடுத்து பாகிஸ்தானியர்கள் 5.16 லட்சம், ஐயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் 3.78 லட்சம், ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்கள் 2.97 லட்சம், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் 2.28 லட்சம் பேரும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், இங்கிலாந்தில் சீனர்கள், அமெரிக்கர்களை விட இரண்டு மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அங்கு வங்கதேசம், ஜேர்மன், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment