Ads (728x90)

மணிரத்னம் படத்தில் ஸ்ருதிஹாசன்?

காதல் கண்மணி’ வெற்றியைத் தொடர்ந்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக களமிறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இவர் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

தற்போது, இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் மணிரத்னம் ஸ்ருதியை சந்தித்து பேசியதாகவும், ஆனால், ஸ்ருதி கைவசம் நிறைய படங்கள் இருப்பதால், இப்படத்திற்கு தேதி ஒதுக்க முடியாத நிலை உள்ளதாகவும், இருப்பினும், மணிரத்னம் மீதுள்ள மரியாதை நிமித்தமாக அவருடைய படத்துக்கு தேதி ஒதுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், மணிரத்னம் அலுவலக வட்டாரங்களில் விசாரிக்கும்போது, மணிரத்னம் தற்போது சென்னையில் இல்லையென்றும், எந்த விஷயமென்றாலும் அவர் திரும்பி வந்தபிறகே முடிவு செய்யப்படும் என்றும், யாரிடமும் புதிய படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லையென்றும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடுவோம் என்று கூறுகின்றனர்.

மேலும், இப்படத்தில் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்த துல்கர் சல்மானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget